தெய்வத்தின் நாமம்...
பெயர் அல்லது நாமம் என்பது ஒவ்வொருவரையும் அடையாளம் காண்பிக்கும் குறியீடாக உள்ளது. மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தப்படும் போது அல்லது நமக்கு தெரியாதவர்களை நாம் சந்திக்கும்போது முதலில் பெயரை சொல்லித்தான் அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறோம்.
ஒருவரை பற்றி குறிப்பிடும் போது, சாதாரணமாக ’ அவன் இவன் ’ என்று சொல்லுவதில்லை. ’ ஜேம்ஸ், ஜான்’ என்று பெயரை சொல்லித்தான் அடையாளம் காண்கிறோம். ஒருவரின் பெயரை சொல்லாமல் அடையாளம் காண்பிக்க முடியாது. எனவே ஒவ்வொருவருக்கும் பெயர் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிறது.
தேவனே சில நேரங்களில் பெயரை மாற்றி புதிய பெயரை கொடுத்திருப்பதாக பைபிள் சொல்லுகிறது. உதாரணமாக ’ ஆப்ரமை - ஆப்ரகாம்’ ( ஆதியாகமம் 17:5 ) என்றும், ’ சாரை - சாராவாகவும்’ ( ஆதியாகமம் 17:15 ), ’ ஜேக்கப்- இஸ்ரேயில்’ ( ஆதியாகமம் 38:28 ) எனவும் பெயர் மாற்றப்பட்டதை பைபிளில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.
அப்படிப்பட்ட தேவனின் பெயர் என்ன?
தேவன் அவரின் பெயரை முதன்முதலாக மோசஸ்க்கு அறிவிக்கிறார் ( யாத்திராகமம் 3:13 -15 ). அவரின் பெயர் YHWH என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் பைபிள் அதை யஹோவா என அறிவிக்கிறது ( யாத்திராகமம் 6:2 )
YHWH அல்லது யஹோவா என்ற நாமத்தின் அர்த்தம் என்ன?
மோசே தேவனை பார்த்து சொல்லுகிறார்," நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் என்னை அனுப்பினார் என்று சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடம் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் " ( ஆதியாகமம் 3:13 )
அதற்கு தேவன், “இருக்கிறவராக இருக்கிறேன்” (I AM WHO I AM )" என்று சொல்லி, “இருக்கிறேன் ( I AM ) என்பவர் என்னை உங்களிடத்தில் அனுப்பினார் என்று சொல்” - என்கிறார். (ஆதியாகமம் 3:14 )
‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்று அவர் கூறும்போது அது அவரின் முழுமையை, ஆளுமையை, மகத்துவத்தை, அவரின் சிருஷ்டியின் பரிபூரணத்துவத்தை உணர்த்துகிறது.
எப்போதும் நம்முடன் இருந்து நம்மை வழி நடத்தி செல்லுகிறவர், எல்லா காலத்திலும் நமக்கு உறுதுணையாக இருக்கிறவர், நம்மை ஒருபோதும் கைவிடாதவர் என்பதை இது உணர்த்துகிறது.
பாவத்தின் பாரத்தால் நாம் வளைந்து ஒடியும்போது, நம்மை அன்புடன் கை கொடுத்து அந்த பாவத்திலிருந்து நமக்கு விடுதலை கொடுப்பதை தெரிவிக்கிறது…