மனிதனின் சந்தேகமும் தெய்வத்தின் பதிலும்...

Gandhi, God, Jesus, Man

நாம் எப்போதும் தேவனுடன் பேசுவதில்லை. தேவன் நம்மிடம் பேசினாலும் அதை கவனிக்க நமக்கு நேரம் இருப்பதில்லை. தேவன் எப்படி நம்முடன் பேசுகிறார். சற்று கவனித்து பாருங்கள்..

மனிதன்: தேவனே இந்த காரியத்தை என்னால் செய்ய முடியவில்லை. செய்து முடிக்க வேண்டிய திறன் என்னிடம் இல்லாமல் இருக்கிறது.

தேவன்: உன்னால் முடியாத காரியங்கள் என்னால் முடியும் ( லூக்கா 18: 27 )

மனிதன்: நான் சோர்வு அடைந்தவனாக இருக்கிறேன் தேவனே

தேவன்:என்னிடத்தில் வா உனக்கு இளைப்பாறுதலை தருகிறேன் (மத்தேயு 11:28 )

மனிதன்:என் மீது அன்பு செலுத்த யாருமில்லை

தேவன்: உன் மீது நான் அன்பு செலுத்துகிறேன் (யோவான் 3:16 )

மனிதன்: எனக்கு வழி காட்ட யாருமில்லை

தேவன்: நீ நடக்க வேண்டிய வழியை நான் காட்டுவேன்.உன் மீது என் கண்களை வைத்து, உனக்கு ஆலோசனை கூறுவேன் (சங்கிதம் 32:8 )

மனிதன்: எனக்கு பயமாக இருக்கிறது.

தேவன்:நான் உனக்கு பயமென்ற ஆவியை கொடுக்கவில்லை. பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை கொடுத்திருக்கிறேன். (2 திமேத்தேயு 1:7 )

மனிதன்: எனக்கு யாருமில்லை. தனிமையில் இருப்பதைப்போல் உணருகிறேன்.

தேவன்: நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. (எபிரெயர் 13:5 )