தெய்வமே...என் தெய்வமே!!!
என் தேவனே… என் சினேகமே…
உன் கையில் அர்ப்பணம் என் ஜீவிதம்!
மண்ணான எனையும் மோட்சித்த தேவா!!
பண்ணாலே உனையும் புகழுவேன் நாதா!!
என் தோழனே… என் ஜீவனே…
கண்ணின் மணியாய் கண்டாய் எனையே!
விண்ணில் இருந்து வந்த மன்னா!!
மண்ணில் ஆனாய் சிறு விருந்தாய்!!
என் சாந்தியே… என் மோட்சமே…
உன் பாதமே என் தஞ்சமே!
இருள் முடும் நேரமாய் என் வீதியில்!!
அருள் தரும் விளக்காய் என் பாதையில்!!
என் நேசனே… என் பிரியனே…
உன்னால் பெற்றேன் என் வாழ்வையே!
வாழ்வினை கொடுத்தது உன் வசனம்!!
வணங்குவேன் உனை யே அனுதினமும்!!